Friday, November 13, 2020

ஹைபுன் - 1

 ஹைபுன் - 1

****************
தமிழர்களின் பாரம்பரிய திருமண விழாவில் சிறப்பிடம் பெறுவது மாப்பிள்ளை அழைப்பு. திருமணக் கூடத்துக்கு அருகாமையில் இருக்கும் கோயில் அல்லது சமுதாயக் கூடத்திலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கும். இதில் மாப்பிள்ளைக்கு நலுங்கு வைத்து ஆடை ஆபரணங்கள் வழங்கி அவரை அலங்கார ஊர்தியில் அமர்த்தி சீர்வரிசையுடன் அழைத்துச் செல்வர். ஊர் மக்கள் இந்த ஊர்வலத்தை கண்டு மகிழும்படி இருபுறமும் விளக்குகளை தூக்கிச் செல்வர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்த விளக்குகளை (பெட்ரோமாஸ் ) தலையில் சுமந்து செல்வர். மிகச் சொற்ப ஊதியமே இவர்களுக்கு வழங்கப்படும். குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவேண்டும் என மனிதஉரிமைகள் அமைப்பினர் சொல்லியும் எவரும் சமுதாயத்தில் பின்பற்றுவதில்லை.
மற்றவர்களுக்காக வெளிச்சம் காட்டும் விளக்குத் தூண்களாக இருக்கும் இவர்களின் வாழ்வு வெளிச்சமின்றி இருப்பதுதான் அவலம்....
* வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூக்கிகள்
திருமண ஊர்வலத்தில்
.....கா.ந.கல்யாணசுந்தரம்

ஹைபுன் - 1

  ஹைபுன் - 1 **************** தமிழர்களின் பாரம்பரிய திருமண விழாவில் சிறப்பிடம் பெறுவது மாப்பிள்ளை அழைப்பு. திருமணக் கூடத்துக்கு அருகாமையில் ...